Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்வா? சாவா? துரைமுருகன் ரஜினிக்கு பதிலடி!!

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (11:51 IST)
சக்தி இருந்தால் தமிழகத்தில் இருப்பதாய் கூறும் வெற்றிடத்தை ரஜினி நிரப்பட்டும் திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்திருந்த ரஜினி, படங்களில் நடித்தவாறே அரசியல் செயல்பாடுகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதன் பின்னர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் திட்டங்களை அறிவித்தார். 
 
ஆனால், கடைசி வரை கட்சி துவங்குவது குறித்து உறுதியான எந்த கருத்தையும் ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை. இந்த சந்திப்பின் போது சிஸ்டத்தை மாற்ற வேண்டும் எனவும், திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தின் இரு பெரும் கட்சியினை விமர்சித்தார்.
அதிலும் குறிப்பாக, கருணாநிதி என்ற மிகப்பெரிய ஆளுமை இப்போது இல்லை. அவருடைய வாரிசு என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். வரும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் திமுகவிற்கு வாழ்வா? சாவா? போன்றது என பேசியிருந்தார். 
 
இந்நிலையில் திமுக பொருளாளரும் கட்சியின் மூத்த தலைவருமான துரைமுருகன் ரஜினிக்க்ய் பதிலடி கொடுத்துள்ளார். 2021 தேர்தல் திமுகவிற்கு வாழ்வா? சாவா? என ரஜினி கேட்டிருக்கிறார். திமுகவிற்கு நிச்சயம் வாழ்வுதான். 
 
அதேபோல உண்மையில் ரஜினிக்கு சக்தி இருந்தால் வெற்றிடத்தை  நிரப்பட்டும் பார்ப்போம் என பதிலடி கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments