சென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (15:45 IST)
சென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு
சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளரின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த வேட்பு மனு ஏற்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சென்னை துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோத் பி செல்வம். இவரது வாக்காளர் அடையாள அட்டையில் வினோத் என்ற பெயர் மட்டுமே இருந்ததாகவும் பிரமாண பத்திரத்தில் வினோத் பி செல்வம் என குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் இதனால் பெயர் மாறுபடுவதால் வேட்புமனுவை நிறுத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் இன்று காலை வினோத் பி செல்வம் தனது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு, கல்லூரி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்ததில், அதில் வினோத் பி செல்வம் என இருந்ததால் அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
 
இந்த நிலையில் துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணி அமித்ஷாவால் திணிக்கப்பட்ட ஒரு பிளாக்மெயில் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்..!

234 தொகுதிகளிலும் விஜய் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.. தராசு ஷ்யாம் கணிப்பு..!

குடியரசு தின விழாவிற்காக வேலை வாங்கிய பள்ளி நிர்வாகம்.. 8ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி..!

வடநாட்டு அரசியலில் திருப்பம் என ரஜினி சொன்னது.. வைரமுத்துவின் பொய்க்கவிதை: நயினார் நாகேந்திரன்..

கூட்டணிக்கு வரலைல்ல.. விஜய்யை வச்சு செய்யும் டிடிவி, நயினார் நாகேந்திரன், செல்லூர் ராஜு..!

அடுத்த கட்டுரையில்
Show comments