Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவைத் தேர்தலில் துரை வைகோ போட்டியா? வைகோ பதில்..!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (11:19 IST)
வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதில் ஒரு தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி உடையாமல் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மதிமுகவும், திமுக கூட்டணியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சிக்கு திமுக ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்  மதிமுகவின்  நிர்வாக குழு கூட்டத்தில் பேசியபின் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதிமுகவின் முதன்மை செயலர் துரை வைகோ போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தியதாகவும் அதற்கு நானோ துரை வைகோவோ பதில் கூறவில்லை என்றும் தேர்தல் ஆயத்த பணிகளை தற்போது செய்துவிட்டு அதன் பிறகு தேர்தல் நேரத்தில் போட்டியிடுவது யார் என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்து வரும் மக்களவை தேர்தலில் துரை வைகோ போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என்று கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செண்ட்ரல், எக்மோரை தொடர்ந்து.. பெரம்பூரில் பிரம்மாண்ட ரயில் முனையம்! - தெற்கு ரயில்வே அனுமதி!

ஜார்ஜியா நாட்டில் விஷவாயு கசிவு! பரிதாபமாக பலியான இந்தியர்கள்!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு: சான்றிதழ் பதிவு செய்ய நாளை கடைசி தேதி..!

பரிட்சைக்கு ஒழுங்கா படிங்க.. சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை: தமிழ்நாடு வெதர்மேன்

துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட 15 வயது பள்ளி மாணவி.. 3 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments