தமிழ்நாட்டில் பருவமழைக்காலம் முடிந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஜனவரி வரை பல பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில் கடந்த வாரம் பருவமழை முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது பல பகுதிகளிலும் குளிர் அதிகமாக காணப்படுகிறது. காலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும். பிப்ரவரி 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸ் வரையிலும் இருக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K