Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் சிறுமிகளை ஆற்றில் வீசிய தந்தை ! பதறவைக்கும் சம்பவம்

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (20:06 IST)
கும்பகோணத்தில், அரசு பள்ளியில் படித்துவந்த சிறுமியை அவரது தந்தை, நேற்று மதுபோதையில் ஆற்றில் தூக்கிப் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக் கூடத்தில் லாவண்யா மற்றும் ஸ்ரீமதி ஆகிய இருவரும் படித்து வந்தனர்.
 
இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த பின்னர், லாவண்யா மற்றும் ஸ்ரீமதியின் தந்தை அவர்களை  வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அவர் குடிபோதையில் இருந்ததால் இரு சிறுமிகளையும் அருகில் உள்ள ஆற்றில் தூக்கிப் போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஒடிவிட்டதாகத் தெரிகிறது. 
 
லாவண்யா ஆற்றில் தந்தளித்துக் கொண்டு கூச்சலிடுவதைப் பார்த்த சிலர் அவரைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.  இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். அப்போது, போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்த சிறுமி, என்னையும், தங்கை ஸ்ரீமதியை எங்கள் தந்தை, கோபத்தில் ஆற்றில் தூக்கிப் போட்டார் என்று தெரிவித்துள்ளதாகத தகவல்கள் வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூபாய் என்பது சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்பு கொண்டது: நிர்மலா சீதாராமன்..!

நாளை ஹோலி கொண்டாட்டம்: தேர்வு எழுத முடியாவிட்டால் மறுவாய்ப்பு! - சிபிஎஸ்இ அறிவிப்பு!

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா! மீனவர்களுக்கு தடை! பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடல்பகுதி!

டாக்டர், நர்சு, மருத்துவ பணியாளர் பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்! - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments