Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் கலாட்டா செய்த காதல் ஜோடி: கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் பரபரப்பு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (12:49 IST)
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில்  குடிபோதையில் காதல் ஜோடி கலாட்டா செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


 


கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திற்கு இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒருவரும் வந்தனர்.
 
அவர்கள் இருவரும் தள்ளாடியபடி பேருந்து நிலையத்திற்குள் நடந்து சென்றனர். அந்த வழியாகச் சென்ற பயணிகளிடம் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
 
இதைப் பார்த்த அப்பகுதி கடைக்காரர்கள் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால், அந்த காதல் ஜோடி, அங்கிருந்து செல்லாமல் ஆபாச வார்த்தையால் திட்டி கலாட்டா செய்தனர்.
 
இது குறித்து அங்கிருந்த பயணிகள் காவல்துறையினரிடம் புகார் கூறினர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், அந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர்.
 
அந்த விசாரணையில், அந்த இளைஞர் கிருஷ்ணகிரி அருகேயுள்ள மகராஜகடை பகுதியயைச் சேர்ந்தவர் என்பதும், அந்த பெண் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
 
அந்த பெண் நர்சிங் படித்து வரும் மாணவி என்பது தெரிய வந்தது. காதல் ஜோடிகளான இவர்கள், மது அருந்தி விட்டு பேருந்து நிலையம் வந்ததும், அங்கு போதையில் கலாட்டா செய்ததும் தெரியவந்தது.
 
இந்நிலையில், அவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். இதைத் தொடர்ந்து, அந்த காதல் ஜோடியினர் அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மடப்புரம் விசாரணை மரணம்! போராட்டம் நடத்தும் தவெக! அஜித்காக வருவாரா விஜய்?

வேலைக்கு செல்கிறார் முன்னாள் பிரதமர் .. சம்பளம் முழுவதையும் நன்கொடையாக கொடுக்க திட்டம்..!

இனிமேல் இலவசம் கிடையாது.. அப்புக்குட்டி படத்தில் விஜய் அறிவிப்புடன் கூடிய போஸ்டர்..!

மீண்டும் ஒரு விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானம் நொறுங்கி விழுந்ததால் அதிர்ச்சி..!

சாப்பிட வீட்டுக்கு வருகிறேன்.. அம்மாவுக்கு போன் செய்த டாக்டர் ஆற்றில் குதித்து தற்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments