Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேருந்தை நிறுத்தி விட்டு சரக்கடிக்க சென்ற ஓட்டுநர்

பேருந்தை நிறுத்தி விட்டு சரக்கடிக்க சென்ற ஓட்டுநர்
, புதன், 8 ஜூன் 2016 (15:40 IST)
பேருந்தை சாலையில் நிறுத்திவிட்டு மது அருந்துவதற்காக சென்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனரை போலீசார் தேடி வருகிறார்கள்.


 

 
நேற்று இரவு சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு தனியார் பேருந்து புறப்பட்டது. அதில் 8 பெண்கள் உட்பட மொத்தம் 32 பயணிகள் செய்தனர். இரவு 11 மணி அளவில் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, ஓட்டுனரும் நடத்துனரும் அங்கிருந்து சென்று விட்டனர். நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் பயணிகள் எரிச்சல் அடைந்தனர்.
 
அவர்கள் இருவரும் மது அருந்த சென்றதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்பி வந்தனர். அப்போது பயணிகள் அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த அவர்கள் வண்டியை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டனர்.
 
இதனால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். அதன்பின் விடியற்காலை 4 மணியளவில் வேறொரு ஓட்டுனரால், அந்த பேருந்து இயக்கப்பட்டது. இதுபற்றி போலீசாரிடம் புகார் கூறப்பட்டது. 
 
இதையடுத்து சாலையில் பேருந்தை நிறுத்திவிட்டு சென்றுவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தேடி வருகிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த 6 நிறுவனங்களும் ஜெயலலிதா பினாமி நிறுவனங்கள் தான் - சொல்வது கர்நாடகா வழக்கறிஞர்