அதிமுகவில் கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்த நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜெயலலிதாவுக்கு பின்னர் கட்சி கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால், இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று அவருடைய செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
இதை தொடர்ந்து ஆனந்தராஜ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். கொலை மிரட்டல் காரணமாக உடனடியாக நடிகர் ஆனந்தராஜ் வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டது.
இதுகுறித்து ஆனந்தராஜ் கூறும்போது:-
நான் அதிமுகவை விட்டு விலகியதால், யார் மனதையும் புண்படுத்தவில்லை. இந்த நிலையில் ஒரு நடிகருடன் இருக்கும் நபர் எனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் அதிமுகவை சேர்ந்தவர் அல்ல. இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் கொலை மிரட்டல் குறித்து கேட்டறிந்தனர். நடிகர் சங்க பொதுச்செயலாளர் விசாலும் கொலை மிரட்டல் குறித்து விசாரித்தார். இதனால் எனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது என்று கூறினார்.