Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்து மாணவியை நடுத்தெருவில் விட்டுச்சென்ற டிரைவர்

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2015 (12:05 IST)
மாணவி ஒருவரை திருமண ஆசைக்காட்டி தாலிகட்டி பாலியல் பலாத்காரம் செய்து, பின் நடுத்தெருவில் விட்டுச்சென்ற டிரைவரை கைது செய்துள்ளனர்.
 
சென்னை ஆவடியை அடுத்த கணபதி கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு என்ற பாட்சா (20). இவர் தண்ணீர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியும் சில நாட்களாக பழகி வந்துள்ளனர்.
 
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி 10ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை திருமணம் செய்து கொளவதாக கூறியுள்ளார். பின்னர் அவரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். பிறகு திருவேற்காடு கோவிலில் மாணவியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 
திருமணம் முடித்தக் கையோடு கோயம்புத்தூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். மாணவியை அங்கு  வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில், நேற்று முன்தினம் காலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
 
அப்போது அந்த லாரி டிரைவர் மாணவியை அங்கேயே விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் வந்து மாணவியை மீட்டுச் சென்றனர்.
 
இது குறித்து மாணவியின் பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆவடி ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இருந்த பாபுவை கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!