Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோக், பெப்சியை தடை செஞ்சா நாங்க மிக்ஸிங்குக்கு என்ன பன்றது: அதிர்ச்சியில் குடிகாரர்கள் சங்கம்!

கோக், பெப்சியை தடை செஞ்சா நாங்க மிக்ஸிங்குக்கு என்ன பன்றது: அதிர்ச்சியில் குடிகாரர்கள் சங்கம்!

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (17:21 IST)
தமிழகத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படாது எனவும் அதற்கு நாங்கள் தடை விதிக்கிறோம் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை அறிவித்தது.


 
 
இது தொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர், பெப்சி, கோககோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை மார்ச் 1-ஆம் தேதி முதல் நிறுத்த உள்ளோம். மேலும் உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை ஊக்குவிப்போம் என்றார்.
 
இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனைவரும் இதனை மனமார பாராட்டுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
கோக், பெப்சி விற்பனையை ஜூன் வரை வணிகர்கள் நிறுத்தக் கூடாது என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகர்கள் அறிவித்துள்ள கோக், பெப்சி விற்பனை நிறுத்தம் செய்தி தங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.


 
 
டாஸ்மாக் மதுபானகளில் நாங்கள் கோக், பெப்சியை கலந்து குடிப்பதால் மன நிறைவு ஏற்படுகிறது. ஆனால் திடீரென கோக், பெப்சியை நிறுத்துவதால் எங்களுக்கு மன நிலை பாதிக்கப்படும் என கூறியுள்ளனர். இதனால் ஜூன் வரை அதனை நிறுத்தக்கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments