Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ரஜினி மீது சட்ட நடவடிக்கை பாயும் வரை போராடுவோம்” திராவிடர் விடுதலை கழகம் கறார்

Arun Prasath
வெள்ளி, 24 ஜனவரி 2020 (20:26 IST)
பெரியார் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்  வரை போராடுவோம் என திராவிடர் விடுதலைக் கழகம் தெரிவித்துள்ளது.

துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து, ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கூறிவந்தனர். மேலும் ரஜினி மீது சென்னை மற்றும் கோவை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த புகார் இன்று விசாரனைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, புகார் அளித்து 15 நாட்கள் முடிவடைவதற்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? எனவும், புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்கிய பின் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும், இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதே தவறு என கூறினார். இதனையடுத்து திராவிடர் விடுதலை கழகத்தினர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் ”ரஜினி மீதான புகார்கள் மீது ஒரு வாரத்திற்கு பிறகு காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யத் தவறினால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம்” என திராவிடர் விடுதலை கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், “பெரியார் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்  வரை போராடுவோம் எனவும் திராவிடர் விடுதலைக் கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments