Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பெண் மருத்துவர் கைது

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2017 (13:36 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய மருத்துவர் சீதா இன்று கைது செய்யப்பட்டார்.

 


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னமும் அவிழ்க்கப்படவில்லை. தினமும் ஒவ்வொரு தகவல்களாக வருகின்றன. இதில் எது உண்மை, எது வதந்தி என கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி ராஜினாமா செய்ததாக கூறிய பெண் மருத்துவர் சீதா என்பவர் வடசென்னை மாவட்ட ஜெ.தீபா பேரவையின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது, ஜெயலலிதா இறந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இரண்டாவது தளத்தில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிப்பது போல மக்களை ஏமாற்றினார்கள் என்று பரபரப்பை கிளப்பினார்.

இதையடுத்து இவர் உண்மையில் மருத்துவர்தானா? எனவும், அப்பல்லோவில் பணிபுரிந்தாரா? என்றும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

இந்த நிலையில் அப்பல்லோ நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சீதாவை சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்தனர்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னர் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை.. நேரில் வரவழைத்து நிவாரணம் தந்த விஜய் மீது விமர்சனம்..!

இந்த ஆண்டு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா? நீதிமன்றம் கேள்வி..!

பள்ளி, கல்லூரி, விமான நிலையங்களை அடுத்து தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னைக்கு இனி வறண்ட வானிலை தான்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

வங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடையா? ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments