Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜகவில் இருந்து திமுகவிற்கு தாவிய டாக்டர் சரவணன்

பாஜகவில் இருந்து திமுகவிற்கு தாவிய டாக்டர் சரவணன்
, புதன், 16 டிசம்பர் 2015 (22:00 IST)
மதிமுகவில் இருந்து பாஜக பக்கம் தாவிய டாக்டர் சரவணன், தற்போது, திமுகவில் இணைந்துள்ளார்.
 

 
மதுரையில் பிரபல டாக்டர் பி.சரவணன். தமிழக அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதே வேளையில், தமிழ் சினிமா மீதும் ஆர்வம் கொண்டு, ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மிக நெருக்கமாக இருந்த  டாக்டர் சரவணன், முதலில் மதிமுகவில் இணைந்தார். அவருக்கு, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாரத வகையில், கடந்த செப்டம்பர் மாதம் அக்கட்சியிலிருந்து திடீரென விலகி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
 
இதனையடுத்து, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு பாஜக மாநில மருத்துவர் அணிப் பொதுச் செயலார் பதவி வழங்கப்பட்டது.
 
ஆனால், அங்கும் நிலை கொள்ளாமல், திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இன்று ஆராவாரமாக இணைந்தார். 

Share this Story:

Follow Webdunia tamil