Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. உடல்நலக்குறைவா?

Mahendran
புதன், 31 ஜூலை 2024 (16:48 IST)
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

85 வயதாகும் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் தெரிந்ததும் பாமக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளதாகவும் அதன்படி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் அவருக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கமான பரிசோதனைகளை டாக்டர் ராமதாஸ் அவர்கள் ஒவ்வொரு மாதமும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  செய்து வருவதாகவும் அந்த வகையில் தான் இன்றும் அவர் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments