கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பரிசோதனைகளை குறைக்க கூடாது: டாக்டர் ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (16:38 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க கூடாது என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
தமிழகத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதனை மருத்துவர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களும் பாராட்டியுள்ளனர். பரிசோதனை அதிகரிக்க அதிகரிக்க தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இதுகுறித்து கூறியதாவது: 
 
தமிழ்நாட்டில் தினசரி  கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 5000-க்கும் கீழ் குறைந்தாலும் தினசரி சோதனைகளின் எண்ணிக்கை 1.60 லட்சத்திற்கும் கீழ் குறையாமல் தொடர்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இது சரியான நடவடிக்கை!
 
தமிழ்நாட்டில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை இதே அளவில் தொடர வேண்டும். கொரோனா பரவல் தீவிரமடைகிறதா? என்பதை கண்காணிப்பதற்கான சிறந்த வழிமுறை சோதனைகள் தான். அவை குறைக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம்.. மதுரையை வஞ்சிக்கும் பாஜக: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments