தனிச்சின்னம் இல்லை, இரட்டை இலையில் தான் போட்டி.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி முடிவு..!

Siva
வியாழன், 28 மார்ச் 2024 (09:04 IST)
அதிமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியை பெற்று தென்காசியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி தனி சின்னத்தில் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியின் சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனி சின்னத்தில் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் கேட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை என தெரிகிறது

இதனால் ஒரு புதிய சின்னம் வாங்கி, அந்த சின்னத்தை மக்கள் மத்தியில் குறுகிய காலத்தில் கொண்டு செல்வது என்பது சாத்தியமில்லை என்பதை புரிந்து கொண்ட கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் அதாவது அதிமுக வேட்பாளராகவே போட்டியிடுவார் என்பதும் அவர் வெற்றி பெற்றாலும் அதிமுக எம்பி ஆகவே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டணி வைக்காத கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தை ஒதுக்குவது இல்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் கூறியுள்ளார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments