Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூமாபட்டிக்கு யாரும் நம்பி வராதீங்க.. இது சின்ன கிராமம்! - பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்!

Prasanth K
வியாழன், 26 ஜூன் 2025 (12:55 IST)

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் நிலையில் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

மக்கள் பலரும் இன்ஸ்டாகிராமை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், சமீப காலமாக திடீரென சில விஷயங்கள் ட்ரெண்ட் ஆவதும், பலரும் அதை பின் தொடர்ந்து ஓடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இப்படியாக செல்போன் டார்ச் மீது கண்ணாடி க்ளாஸை வைத்து மஞ்சள் பொடி போட்டுக் கொண்டிருந்தவர்களின் கவனம் தற்போது கூமாபட்டி பக்கம் திரும்பியுள்ளது.

 

சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி போல ஒரே நாளில் இந்த கூமாபட்டி பிரபலமாக காரணம் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்ஸர்கள்தான். சிலர் கூமாப்பட்டி ஏரியில் குளித்துக் கொண்டு அதை பூலோக சொர்க்கம் என வீடியோ போட்ட நிலையில் அதை பார்த்து மேலும் சிலர் அங்கு பயணம் செய்து வீடியோ போட்டதாக தெரிகிறது.

 

அதை தொடர்ந்து பலரும் கூமாபட்டியை மேப்பில் கண்டுபிடித்து பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டியானது வழக்கமான கிராமங்களை போன்ற ஒன்றுதான் என்கின்றனர் கூமாபட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள். அங்கு தங்குவதற்கு பயணிகள் விடுதி போன்ற சுற்றுலா அம்சங்கள் எதுவும் பெரிதாக கிடையாது.

 

கூமாபட்டியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அம்சங்கள் ஏதும் கிடையாது என்றும், வீடியோக்களை நம்பி கூமாபட்டிக்கு செல்ல வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுநாள் வரை பெயர் கூட தெரியாத ஒரு கிராமம் திடீரென வைரலாகியுள்ளது கூமாபட்டியினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

கோவில் கட்டுமான பணியில் திடீர் விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்க மாட்டேன்: ஒவைசி அதிரடி..!

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments