Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் உடல் சிதைந்து வருகிறதா?: மருத்துவர் விளக்கம்

ராம்குமார் உடல் சிதைந்து வருகிறதா?: மருத்துவர் விளக்கம்

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (18:49 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


 
 
ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர் குழுவில் தனியார் மருத்துவரை அனுமதிக்க வேண்டும் என ராம்குமாரின் தந்தை தரப்பில் கோரப்பட்டுள்ளதால். ராம்குமாரை 30-ஆம் தேதி வரை பிரேத பரிசோதனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து ராம்குமார் உடலில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், உடல் சிதைந்து வருவதாகவும் வதந்திகள் பரவியது. இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
 
அதில், ராம்குமார் உடல் சிதைய ஆரம்பித்துள்ளதாக வரும் செய்திகளை மருத்துள்ளனர். ராம்குமார் உடல் அதிக குளிரூட்டப்பட்ட தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. யாரும் அனுமதிக்கப்படாத அந்த அறையில் கிருமிகள் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை.
 
ராம்குமாரின் உடல் தசைகள் சுருங்காமலும், சிதையாமலும் இருக்கும். இன்னும் பல நாட்கள் உடலை பாதுகாக்கும் நவீன வசதிகள் உள்ளன. எனவே தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments