Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதாரண மாஸ்க் வேஸ்ட், N95 மாஸ்க் தான் பாதுகாப்பானது: மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (18:28 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது என்பதும் தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் மாஸ்க் என்ற பெயரில் சாதாரண மாஸ்க் அணிந்தால் தற்போது பயன் அளிக்காது என்றும் தரமான மாஸ்க் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் 
 
சாதாரண துணியாலான மாஸ்க் 50 சதவீத கிருமிகளை மட்டுமே தடுக்கும் என்றும் நோய் தொற்று அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் 100 சதவீதம் பாதுகாப்பான மாஸ்குகளை அணிய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்
 
குறிப்பாக N95 போன்ற மாஸ்க்குகளை அணிய வேண்டும் என்றும் இந்த மாஸ்குகல் ரூபாய் 20 க்கு அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும் என்றும் இவ்வகையான மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருக்கவும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர் 
 
இந்த N95 மாஸ்க் ஆனது 95% முகத்தையும் மூக்கையும் மூடிக்கொள்ளும் என்றும் மேலும் டபுள் கிளாத் உள்ளதால் இதனையும் மீறி வைரஸ் உள்ளே செல்வது வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments