Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா குடும்பத்தில் யாருக்கும் அழைப்பு இல்லை: சிவகுமார் அதிரடி!

சசிகலா குடும்பத்தில் யாருக்கும் அழைப்பு இல்லை: சிவகுமார் அதிரடி!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2017 (12:45 IST)
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மருமகன் டாக்டர் சிவக்குமார் தனது பிறந்த நாளை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவுக்கு சசிகலா குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் அவர் அழைப்பு விடுக்கவில்லை என்பது மன்னார்குடி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


 
 
டாக்டர் சிவகுமார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குறிய மருத்துவராக இருந்தார். ஜெயலலிதா சாதாரண உடல்நலக்குறைவுக்கு எல்லாம் மருத்துவமனைக்கு வரமாட்டார். அவருக்காக போயஸ் கார்டனில் ஒரு மினி மருத்துவமனையே இருக்கிறது. இதனை சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார்தான் அமைத்தார்.
 
தனது உடல்நிலை விவகாரத்தில் டாக்டர் சிவகுமார் சொல்வதை அப்படியே கேட்பார் ஜெயலலிதா. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்புவரை அவருடைய பெர்சனல் டாக்டராக சிவகுமார் தான் இருந்தார்.
 
ஜெயலலிதாவுக்கு தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டு இந்த உடல் நலக்குறைவை ஏற்படுத்தியுள்ளனர் செய்திகள் வெளியானது. இந்த தவறான மருந்தை கொடுத்து வந்த விவகாரத்தில் டாக்டர் சிவகுமார் பெயர் அடிப்பட்டது. அதன் பின்னர் அந்த விவகாரம் அப்படியே மறக்கடிக்கப்பட்டது.
 
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் டாக்டர் சிவகுமார் அங்கு இருந்தார். இறுதியில் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் அவரது உடலருகில் நின்றுகொண்டிருந்தார் சிவகுமார். அதன் பின்னர் டாக்டர் சிவகுமார் பற்றி எந்த தகவலும் இல்லை. அவரும் சசிகலா குடும்பத்தினருடன் இருந்த உறவை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வந்தார்.
 
ஜெயலலிதா மரணம் குறித்தான நீதி விசாரணைக்கான கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க சிவகுமார் சசிகலா குடும்பத்தின் உறவையும் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்தான நீதி விசாரணை நடந்தால் நிச்சயம் டாக்டர் சிவகுமாரும் விசாரிக்கப்படுவார்.
 
இந்நிலையில் தனது 50-வது பிறந்தநாளை கோவளத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் டாக்டர் சிவகுமார். தனது பிறந்தநாள் விழாவுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் தனது குடும்பத்தினரையும் தவிர வேறு யாரையும் அவர் அழைக்கவில்லை. குறிப்பாக சசிகலா குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் அவர் அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments