Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு மண்டையில் ஒன்றுமே இல்லையா? பாஜக நிர்வாகி கேள்வி

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (21:41 IST)
உக்ரைனில் 9 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இப்போது தற்காலிகமாக போரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளது. ஆனால் உக்ரைன் ராணுவம் ரஷ்ய வீரர்களை எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை என்று உக்ரைன் கூறி வருகிறது. தொடர்ந்து  9 நாட்களாக நடந்துவரும் இந்த தாக்குதலில் உக்ரைன் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளன.

இந்நிலையில் இப்போது ரஷ்யா உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்யா-  உக்ரைன் போர் நிறுத்தத்தை  வலியுறுத்தி முத்தரசன் தலைமையில்    இந்திய கம்யூனிஸ்ட்  சார்பில் வரும்   7 ஆம் தீதி சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என              அறிவிக்கப்பட்டது.

இதற்கு பாஜக கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி  நாராயணன் திருப்பதி தனது டுவிட்டர் பக்கத்தில், மாஸ்கோவில் மழை பெய்தால் மந்தைவெளியில் குடைபிடிக்கும் கம்யூனிஸ்டுகளே, உங்களுக்கு உண்மையில் மண்டையில் ஒன்றுமே இல்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி!

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!!

ஜியோவை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்! – இனி எவ்வளவு கட்டணம்?

பதவியில் இருந்து அவர தூக்குங்க.! நாட்டுக்கு நல்லது நடக்கும்..! இளங்கோவன் விமர்சனம்..!!

மனைவியுடன் வீடியோ கால் பேசி முடித்தவுடன் தூக்கில் தொங்கிய வழக்கறிஞர்.. சென்னையில் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments