Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2026 மட்டுமல்ல.. 2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!

Mahendran
வெள்ளி, 16 மே 2025 (11:21 IST)
2026 ஆம் ஆண்டு மட்டும் இன்றி, 2031 மற்றும் 2036 ஆம் ஆண்டும் திமுக ஆட்சிதான் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
நீலகிரி மாவட்டம் ஊட்டியில், முதல்வர் ஸ்டாலின் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது, "2026 மட்டும் அல்ல, 2031 மற்றும் 2036 ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சிதான் தமிழகத்தில் இருக்கும்," என்றும், "திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நிலைத்து நிற்கும்," என்றும் அவர் தெரிவித்தார்.
 
மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு அதிக ஆதரவளித்து வருகின்றனர் என்றும், எனவே இனிமேல் தமிழகத்திற்கு தொடர்ச்சியாக திராவிட மாடல் ஆட்சிதான் வரப்போகிறது என்றும் அவர் கூறினார்.
 
ஜனாதிபதி, உச்ச நீதிமன்றத்தில் கருத்து கேட்ட விவகாரத்தில், பிற மாநில முதல்வர்களிடம் கருத்து கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments