Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் முதல்வர் வேட்பாளரா இருந்த நமக்கென்ன? தங்க தமிழ்செல்வன்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (12:27 IST)
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தோல்வி நிச்சயம் என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
அதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் இருவருடனும் திடீர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். 
 
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், ஈபிஎஸ், ஓபிஎஸ் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தாலும் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என தெரிவித்துள்ளார். 
 
அதோடு, அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டதால் பிரச்சினை தீரவில்லை. பிரச்சினை இனிதான் தொடங்க போகிறது. இனி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ்ஸும், ஓபிஎஸ்க்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் வேலை பார்க்க தொடங்குவார்கள் எனவும் தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments