திருட்டு கனெக்‌ஷன் எடுத்த திமுக: ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அமைச்சர் ஜெயகுமார்

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (11:23 IST)
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக வைக்கப்பட்ட கட் அவுட்டுகளுக்கு அனுமதியின்றி திமுக மின்சாரம் எடுத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பாண்டிச்சேரி முதல்வர் நாராயண சாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருணாநிதியின் சிலை திறப்பை முன்னிட்டு சென்னை முழுவதிலும் திமுக பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. மாநகராட்சியின் ஒப்புதல் இல்லாமல் கட் அவுட்டுகளுக்கு மின் இணைப்பு எடுத்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது, திமுக திருட்டு கனெக்‌ஷன் எடுத்ததை வீடியோ ஆதாரத்துடன் தெரிவித்தார். இந்த செயலில் ஈடுபட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் போட்ட 2 கண்டிஷன்கள்!.. திமுக கூட்டணியில் நீடிப்பதில் சிக்கல்!...

2026-27 நிதியாண்டிற்கான தமிழக இடைக்கால பட்ஜெட்.. என்னென்ன முக்கிய அம்சங்கள்?

ராகுல் காந்தி அந்த பதவிக்கே லாயக்கற்றவர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் மனைவி கடும் தாக்கு..!

அமெரிக்காவில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. நாடு கடத்தப்படும் இந்தியர்?

குழந்தையை வாடகை காரில் மறந்துவிட்டு இறங்கிய தம்பதி.. 1 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்..

அடுத்த கட்டுரையில்
Show comments