Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு பருவமழை.. மக்களுக்கு உதவி செய்யுங்கள்: திமுக தலைமை உத்தரவு..!

Siva
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (21:25 IST)
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதி முதல் தொடங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பருவமழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
பருவ மழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது. பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கட்சியினருக்கு திமுக அறிவுறுத்தியுள்ளது.
 
மிக அவசிய தேவையான குடிநீர், பால் தங்கள் பகுதிகளில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.வழக்கத்திற்கு மாறாக பெருமழை வந்தாலும், பதற்றமில்லாமல் மழைக்காலத்தை எதிர்கொள்ள வேண்டும்.தேவையான மருந்து மாத்திரைகளை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தர ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.வழக்கத்திற்கு மாறாக பெருமழை வந்தாலும், பதற்றமில்லாமல் மழைக்காலத்தை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.",
    
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு..!

மகளை கொலை செய்ய கூலிப்படை அமைத்த தாய்.. கடைசியில் நடந்த அதிர்ச்சி ட்விஸ்ட்..!

கெளரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுக்கு ஜாமின்.. மாலை அணிவித்து வரவேற்ற இந்து அமைப்புகள்..!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மக்களவை வெற்றி மாதிரி சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறுவோம்: சரத்பவார்

அடுத்த கட்டுரையில்
Show comments