எடப்பாடியில் தொடங்கும் கனிமொழி; ஜனவரியில் தொடங்கும் ஸ்டாலின்! – திமுக தேர்தல் பிரச்சாரம் ஸ்டார்ட்!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (10:41 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக மற்ற கட்சிகளுக்கு முன்னதாகவே தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் இன்னமும் கூட்டணிகளே முடிவாகாத நிலையிலும் திமுக தனது தேர்தல் பிரச்சார பணியை தொடங்கிவிட்டது.

இன்று உதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார். தற்போது திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு அறிவித்துள்ளதன்படி எதிர்வரும் நவம்பர் 29ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஊரான எடப்பாடியிலிருந்து திமுக எம்.பி.கனிமொழி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

மற்ற கட்சிகளை விட முன்னதாகவே பிரச்சாரத்தை தொடங்குவதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை அறிய முடியும் என்பதோடு மக்களிடையே தேர்தலுக்காக மட்டுமே வந்ததாக ஏற்படும் தோற்றத்தையும் தவிர்க்க முடியும் என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments