கோமாவில் திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் – தொண்டர்கள் சோகம் !

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (09:45 IST)
பேராசிரியர் க அன்பழகன்

திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் அப்போல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் உடநிலையில் முன்னேற்றம் இல்லை என சொல்லப்படுகிறது.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று முன் தினம் இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதையடுத்து கடந்த இரு தினங்களாக சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என சொல்லப்படுகிறது. அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் சார்பில் சொல்லப்பட்டுள்ளது.

96 வயதாகும் அவர் வயது மூப்பு காரணமாக உடல்நிலை நலிவுற்று சில மாதங்களாக  ஈடுபடாமல் முழு ஓய்வில் இருந்து வந்தார். அவருக்கு அவ்வப்போது மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர். இப்போது மருத்துவமனையில் இருக்கும் அவரை திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் நேரில் சென்று பார்த்து வந்துள்ளனர். இந்த செய்தி திமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments