ஒரே ஒரு தொகுதி தான்.. திமுக கறார்.. கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா மதிமுக?

Siva
ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (11:53 IST)
திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு ஒரே ஒரு தகுதி மட்டுமே கொடுக்க முடியும் என திமுக காரராக கூறியுள்ளதை அடுத்து மதிமுக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து பெற்று வரும் நிலையில் மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் கொடுப்பது என்பது குறித்த பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.

இந்த பேச்சு வார்த்தையின் போது மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் கொடுக்க முடியும் என திமுக கூறியதாகவும் அதற்கு வைகோ ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி கடந்த முறை போல ராஜ்யசபா தொகுதியும் இந்த முறை தர முடியாது என திமுக கூறிவிட்டதாகவும் இதனால் வைகோ கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இரு கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்பதும் அதில் உடன்பாடு எட்டவில்லை என்றால் மதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments