Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாசாலையில் சாலை மறியல் : 5ம் நாளாக திமுக போராட்டம் : சென்னையில் பரபரப்பு

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (10:12 IST)
காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

 
கடந்த 4 நாட்களாகவே சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளிலும், சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களை திமுக நடத்தியது. இந்நிலையில், இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், சென்னையில் 5ம் நாளாக இன்று திமுக போராட்டத்தை கையில் எடுத்தது. சென்னை அண்ணாசாலையில் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் இணைந்துள்ளன.
 
அதன் பின் அவர்கள் வாலஜா சாலை வழியாக, ஸ்டாலின் தலைமையில் மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள அண்ணா சமாதியை நோக்கி பேரணியாக சென்றனர். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோரும் கருப்புக் கொடி ஏந்தியபடி ஸ்டாலினுடன் பேரணியாக சென்றனர்.
 
அப்போது, அவர்கள் மோடிக்கு எதிராக குரல் எழுப்பினர். அதை எதிர்பார்க்காத போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், தடுப்பு சுவர்களை நிறுத்தி இந்த பக்கம் செல்லக்கூடாது எனக் கூறினர். ஆனாலும், அவற்றை பொருட்படுத்தாமல் திமுகவினர் அண்ணா சமாதியை நோக்கி அவர்கள் செல்ல முயன்றனர்.
 
இதனால், போலீசாருக்கும், திமுகவினருக்கும் மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments