கச்சா எண்ணெய் விலை குறைவு.. பெட்ரோ மட்டும் ஏன் உயர்வு! – திமுக எம்.பி கேள்வி!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (11:24 IST)
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வருவது குறித்து திமுக எம்.பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோ, டீசல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுதொடர்பாக கேள்வியெழுப்பியுள்ள திமுக எம்.பி வில்சன் “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில் அதிக படியான வரிகள் காரணமாக நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனாவால் ஏற்கனவே மக்கள் பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் அவர்களுக்காக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments