Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர்கள் ஓசியில் பயணம் செய்யுங்கள், ஆண்கள் வீட்டு வேலை செய்யட்டும்: திமுக எம்.எல்.ஏ

Mahendran
வியாழன், 12 ஜூன் 2025 (10:15 IST)
அரசுப் பேருந்துகளில் பெண்கள் 'ஓசியில்'  பயணம் செய்து வேலைக்கு செல்லட்டும், ஆண்கள் வீட்டு வேலைகளை பாருங்கள் என்று திமுக எம்எல்ஏ ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தேனி மாவட்டத்தில் சமுதாய நலக்கூடத்தைத் திறந்து வைத்துப் பேசிய ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன், "மக்கள் மனங்களை அறிந்து செயல்படுபவர் முதல்வர் ஸ்டாலின் என்றும், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என்றும்," தெரிவித்தார். மேலும், "மகளிர் அனைவரும் அரசுப் பேருந்தில் ஓசியில் தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்து வேலை செய்யுங்கள்; வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் வேலை செய்யட்டும்," என்று பேசினார்.
 
"மகளிரை ஓசி" என விமர்சித்த எம்எல்ஏவின் பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். "மகளிரை ஓசி என திமுக எம்எல்ஏ விமர்சனம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்றும், ஏற்கனவே அமைச்சர் பொன்முடி இதேபோன்று தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த நிலையில், தற்போது இன்னொரு எம்எல்ஏவும் விமர்சனம் செய்கிறார் என்றும், பெண்களை கொச்சையாகப் பேசி வருகிறார் என்றும்," தெரிவித்துள்ளார். "அதிகார மமதையில் எளிய மக்களை இழிவாகவும் ஏளனப்படுத்தியும் வரும் திமுக அரசு இனியாவது திருந்த வேண்டும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments