கல் உடைக்கும் தொழிலாளி பலியான வழக்கு: திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி விடுதலை ரத்து..!

Mahendran
வெள்ளி, 7 மார்ச் 2025 (17:21 IST)
கல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி பலியானது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ பழனியாண்டிக்கு வழங்கப்பட்ட விடுதலையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும், இந்த வழக்கை மீண்டும் சட்டப்படி விசாரணை செய்து தீர்ப்பளிக்க கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், இந்த விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கரூர் அருகே உள்ள கல் உடைக்கும் ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம், எம்.எல்.ஏ பழனியாண்டியை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தற்போது அவரது விடுதலை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவுக்கு செல்ல வேண்டும்: அப்போது தான் திமுகவின் நாடகம் தெரியும்: பாஜக

கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவிக்கு அமைச்சர் பதவி.. குஜராத் புதிய அமைச்சரவையின் முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments