Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்புமிகு அம்மா என கூறி ஸ்டாலினை கடுப்பேற்றிய திமுக எம்எல்ஏ!

மாண்புமிகு அம்மா என கூறி ஸ்டாலினை கடுப்பேற்றிய திமுக எம்எல்ஏ!

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (11:25 IST)
கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் ஒரு விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது. எடப்பாடி தரப்பில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் கவனிக்கப்படுவதாகவும், திமுக எம்எல்ஏக்கள் சிலர் அதிமுக பாசத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


 
 
இந்நிலையில் தமிழக சட்டசபையில் மதுராந்தகம் தொகுதி திமுக எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசும்போது தான் திமுக உறுப்பினர் என்பதை மறந்து மாண்புமிகு அம்மா அவர்களின் என தனது பேச்சை ஆரம்பித்துள்ளார்.
 
திமுக உறுப்பினர் நெல்லிக்குப்பம் புகழேந்தியின் இந்த பேச்சை கேட்ட திமுகவினர் அதிர்ந்துவிட்டனர். அதன் பின்னர் சட்டசபை முடிந்ததும் புகழேந்தியை அழைத்த துரைமுருகன் என்ன நினச்சிட்டு இருக்கீங்க, விட்டா அதிமுக கரை வேட்டிய கட்டிட்டு வந்திடுவிங்க போல என கடுமையாக எச்சரித்துள்ளார்.
 
அதன் பின்னர் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் புகழேந்தியை கண்டித்துள்ளார். எல்லோரும் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க, ஏன் இப்படி பேசுறீங்கன்னு எனக்குத் தெரியும். கட்சித் தலைமைக்கு துரோகம் பண்ணாம, கொஞ்சமாவது மனசாட்சியோட நடந்துக்கோங்க என எச்சரித்துள்ளார் ஸ்டாலின்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments