பொறியாளரை தாக்கிய விவகாரம்; திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது வழக்கு!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (12:18 IST)
மாநகராட்சி உதவி நிலை பொறியாளரை தாக்கியதாக திமுக எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்து வருபவர் கே.பி.சங்கர். இவர் அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் இருந்த மாநகராட்சி உதவிப் பொறியாளரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதை தொடர்ந்து கே.பி.சங்கர் கட்சியில் வகித்து வந்த முக்கிய பதவியிலிருந்து திமுக அவரை விலக்கி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நேற்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசிய கே.பி.சங்கர் உரிய விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் சாலை பணி நடைபெற்ற இடத்திற்கு தான் செல்லவில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மாநகராட்சி பொறியாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ கே.பி. சங்கர் மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கே.பி.சங்கர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் காரணமா?

மாணவர்கள் கேலி.. கண்டிக்காத ஆசிரியர்கள்.. 9 வயது மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

உடல் பருமனாக இருந்தால், நீரிழிவு நோய் இருந்தால் விசா கிடையாது: டிரம்ப் அதிரடி

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments