கண்விழித்துப் பார்த்த ஜெ அன்பழகன் – திமுகவினருக்கு மகிழ்ச்சி செய்தி!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (09:11 IST)
திமுக மாவட்ட செயலாளர் ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக வெண்ட்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவர்கள் கடந்த 2ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள ரேலா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  80%  ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் உதவியுடன் அளிக்கப்பட்டது. அதையடுத்து அவரது செயற்கை சுவாச அளவு படிப்படியாக குறைத்து 40 சதவீத அளவுக்குக் கொண்டு வரப்பட்டது.

தற்போது மேலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு 29% ஆக குறைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. நேற்று அவர் கண்விழித்துப் பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த செய்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டதாகவும் அதைக்கேட்டு அவர் மகிழ்ச்சி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments