Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவருக்கான தேர்தல்? ஆகஸ்ட் 28 திமுக பொதுக்குழு கூட்டம்!

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (21:27 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதோடு, கட்சியின் தலைவர் பதவியை யார் ஏற்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான பதில்களாக பல வதந்திகள் பரவினாலும், இது குறித்து திமுக தரப்பில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட்டதாய் தெரியவில்லை. 
 
இத்ற்கு முன்னர் கடந்த 14 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தற்போது வரும் 28 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் கூடவுள்ளது. 
 
ஆகஸ்ட் 28 ஆம் தேதி, மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
 
திமுக தலைவராக தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிரது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments