கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வருவதா..? ஸ்டாலின் கொள்கைதான் என்ன?

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (16:01 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் ஆங்காங்கே கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். சமீபத்தில் மானாமதுரையில் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு, 
 
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. எனவே, சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என ஆரம்பத்தில் திமுக சொன்னது. தற்போது அதேகருத்தைதான் சட்டத் துறை அமைச்சர் சண்முகம் வலியுறுத்தி வருகிறார். 
 
எனவே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக முன்னாள் முதல்வரின் மர்ம மரணத்தில் தொடர்புடையவர்கள் யார் என அடையாளம் காணப்பட்டு, உண்மையை கண்டுபிடித்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். 
 
மேலும், 11 எம்எல்ஏக்கள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பு வந்தால் அதிமுக அரசு காலியாகிவிடும். அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் அமருவதற்கு வாய்ப்புள்ளது. 
 
ஆனால் திமுக இதை விரும்பவில்லை. கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற கொள்கையை கருணாநிதி கற்றுத் தந்திருக்கிறார். மக்களிடையே திமுகவின் கொள்கையைச் சொல்லி அவர்களது ஆதரவைப் பெற்று அதிக மெஜாரிட்டியில் ஆட்சியில் அமர்வோம் என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments