Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவில் எனக்கு அங்கீகாரம் தரவில்லை என்று நான் சொன்னதில்லை: நடிகை குஷ்பு

திமுகவில் எனக்கு அங்கீகாரம் தரவில்லை என்று நான் சொன்னதில்லை: நடிகை குஷ்பு
, வெள்ளி, 28 நவம்பர் 2014 (09:37 IST)
நான் எப்போதும் மதிக்கக்கூடிய தலைவர் கருணாநிதி என்றும், திமுகவில் எனக்கு அங்கீகாரம் தரவில்லை என்று நான் சொன்னதில்லை என்றும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
 
திமுக வில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, டெல்லியில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
 
அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை சந்தித்த நடிகை குஷ்பு, பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலம், சென்னை திரும்பினார்.
 
சென்னை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடத் கூறியதாவது:-
 
நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியைப் பார்த்து வளர்ந்தவள். காங்கிரஸ் உணர்வு எனது ரத்தத்தில் உள்ளது.
 
காங்கிரஸ் கட்சியில், எனக்கு எந்த பதவி தரப்படும் என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படும். 2016ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் எனது பணி என்ன? என்பதை கட்சி முடிவு செய்யும்.
 
காங்கிரஸ் கட்சி நடிகர், நடிகைகளை நம்பி இல்லை. கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். திமுக வில் எனக்கு அங்கீகாரம் தரவில்லை என்று நான் சொன்னதில்லை.
 
இதற்கு காது, மூக்கு வைத்து கூறவேண்டாம். நான் எப்போதும் மதிக்கக்கூடிய தலைவர் கருணாநிதி. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரை சந்திப்பேன்.
 
காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்காகப் பல்வேறு நன்மைகளை செய்துள்ளது. இலங்கை தமிழர்கள் நலன் உள்பட பல நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். காங்கிரஸ் கட்சி பல தோல்விகளை சந்திப்பதால் ஒதுங்கியிருக்காது. வெற்றி, தோல்வி என்பது சகஜம்.
இவ்வாறு அவர் கூறினார்.
 
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவருடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil