சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை..! அன்புமணி ராமதாஸ்.!!

Senthil Velan
சனி, 3 பிப்ரவரி 2024 (11:29 IST)
சமூக நீதிப் பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் இல்லாததால் குருவி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட விலைவாசிகளின் விலை அதிகரித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 
அரிசி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்த அன்புமணி ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் இருந்தும் தமிழக அரசுக்கு மனமில்லை என்று விமர்சித்தார். சமூக நீதிப் பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை என்று கடுமையாக சாடினார்.  

ALSO READ: பேரறிஞர் அண்ணா நினைவு தினம்..! ஸ்பெயினில் முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை..!!
 
இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது என்றும் மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. செஞ்சுரி அடிக்க போகும் டிரம்ப்..

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments