Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக ஒரு மூழ்கும் கப்பல்: நத்தம் விஸ்வநாதன் கடும் தாக்கு

திமுக ஒரு மூழ்கும் கப்பல்: நத்தம் விஸ்வநாதன் கடும் தாக்கு

திமுக ஒரு மூழ்கும் கப்பல்: நத்தம் விஸ்வநாதன் கடும் தாக்கு
, செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (04:15 IST)
திமுக ஒரு மூழ்கும் கப்பல் என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடும் தாக்குதல் நடத்தினார்.
 

 
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அதிமுக இளைஞர்–இளம்பெண்கள் பாசறை எழுச்சி தின பொதுக் கூட்டம் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது:–
 
தமிழக அரசியல் கட்சிகள் யாரும் திமுகவை ஏற்று கொள்ள மறுக்கின்றனர். திமுக ஒரு மூழ்கும் கப்பல். அதில் யாரும் பயணிக்க மாட்டார்கள். தற்போது கூட்டணிக்கு வாங்க என கூவி, கூவி மு.க.ஸ்டாலின் எல்லோரையும் அழைக்கிறார். ஆனால், யாரும் அந்த கூட்டணிக்கு செல்ல மறுக்கின்றனர்.
 
அதிமுகவிற்கு எதிராக ஒரு மெகா கூட்டணி அமைத்து வீழ்த்தி விடலாம் என்று திமுக நினைத்தால் அது பகல் கனவு. அதிமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil