Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 வாங்கிக்கோங்க.. இல்ல 27வது வேணும்! – இழுபறியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (16:41 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் – திமுக இடையே இழுபறி நீடித்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தனது தோழமை கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்ற கட்சிகளுடன் ஓரளவு சுமூகமாக தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் தேசிய கட்சியான காங்கிரஸுடன் இழுபறி நீடித்து வருகிறது.

காங்கிரஸ் 31 தொகுதிகள் எதிர்பார்த்த நிலையில் திமுக 20 தருவதற்கு பேசியதாக தெரிகிறது. இதனால் முதற்கட்ட கூட்டத்தில் உடன்பாடு ஏற்படாத நிலையில் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் நடந்த தொகுதி பங்கீடு கூட்டத்தில் காங்கிரஸ் இறங்கி வந்து 27 கேட்டதாகவும், ஆனால் திமுக 20லிருந்து 22 ஆக தொகுதியை உயர்த்தியுள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடரும் பேச்சுவார்த்தையில் காங்கிரஸுக்கு தொகுதி 22லிருந்து 27க்குள் பேசி முடிவாகும் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்? இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை? - அமெரிக்கா ரியாக்‌ஷன் என்ன?

நிதியில்லை.. கைவிடப்பட்டது குழாய் வழியே கிருஷ்ணா நீரை கொண்டு வரும்.. தமிழக அரசு அறிவிப்பு..!

லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ச்சியில் பயணிகள்..!

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments