Webdunia - Bharat's app for daily news and videos

Install App

61 % டாஸ்மாக்கை வைத்துள்ளது திமுக: அன்புமணி குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (20:21 IST)
ஆட்சிக்கு வந்த உடன் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறியுள்ள திமுக தான் 61% டாஸ்மாக்கை வைத்துள்ளது என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


 
 
பாமக தேர்தல் அறிக்கையை தான் திமுக காப்பியடித்து தங்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது என ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது பாமக. மதுவிலைக்கை அமல் படுத்துவோம், ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து மதுவிலக்கு தான் என நாங்கள் கூறி வந்ததை தான் தற்போது எல்லா கட்சிகளும் கூறி வருகின்றன, இது எங்களுக்கு கிடைத்த வெற்றி என அன்புமணி ராமதாஸ் பல மேடைகளில் கூறி வருகிறார்.
 
இந்நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்குக்கு தான் என ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கூறி நாடகம் ஆடி வருகிறார் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் மதுவிலக்கு என்பது ஒரு செயல்படுத்தும் முறை, ஆனால் மதுவிலக்கை அமல் படுத்துவதற்கு சட்டம் கொண்டுவருவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் உள்ளது.
 
இது மக்களை ஏமாற்றும் வேலை, பொய்யான அறிக்கையாகும் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments