Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 1-ல் திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம்!

Sinoj
திங்கள், 19 பிப்ரவரி 2024 (21:08 IST)
வரும் மார்ச் 1 ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன.
 
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக   நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரசாரத்துக்கு தயாராகி வருகிறது. 
 
எனவே தமிழக முதல்வரும்,  திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வரும் மார்ச் 1 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், சென்னையில் அதேதினத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துகிறது திமுக.
 
இக்கூட்டத்தில் பங்கேற்க இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிகிறது.
 
மேலும், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments