Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக பொதுச் செயலாளர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்

திமுக பொதுச் செயலாளர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்

திமுக பொதுச் செயலாளர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்

கே.என்.வடிவேல்

, வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (04:57 IST)
திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளார்.
 

 
திமுகவில் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவும், ஆறு மாதத்துக்கு ஒருமுறை செயற்குழுவும் கூட்ட வேண்டும் என்பது கட்சியின் விதிமுறை ஆகும்.
 
இதன்படி, டிசம்பர் மாதத்திலே திமுக பொதுக்குழு நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் சிலபல காரணங்களுக்காக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
 
மேலும், சட்ட மன்றத் தேர்தல் கூட்டணி இன்னும் முடிவாகாததால் பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில், சென்னை திமுக  பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, திமுக பொருளாளராக உள்ள மு.க.ஸ்டாலின் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
திமுகவில் தற்போது பொதுச் செயலாளராக உள்ள பேராசிரியர் அன்பழகன் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி வரும் சட்ட மன்றத் தேர்தலில் நிற்க மாட்டேன் என்று அறிவித்தது குறிப்பிடதக்கது. அதுபோலவே, தனது பொதுச் செயலாளர் பதவியையும் விட்டுக்கொடுக்க அவர் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil