Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பயங்கரம் : திமுக பெண் நிர்வாகி பட்டப்பகலில் வெட்டிக்கொலை

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (03:07 IST)
சென்னை கொருக்குப்பேட்டையில் திமுக மகளிர் அணி நிர்வாகி மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
சென்னையை அடுத்த கொருக்குப்பேட்டை மேற்கு கே.ஜி.கார்டன் தெருவை சேர்ந்த குமாரின் மனைவி லட்சுமி (வயது40). இவர் 42ஆவது வட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளராக இருந்தார்.
 
லெட்சுமி இன்று காலை 11 மணி அளவில் தனது வீட்டு அருகில் சென்ற போது  மர்ம நபர்கள் சிலர், அவரை வழி மறித்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக லட்சுமியை வெட்டினர்.
 
இதனை சிறிதும் எதிர்பாராத லெட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். லெட்சுமியை தாக்கிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
 
இதனைக் கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள், லட்சுமியை மீட்டு உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே லட்சுமி பரிதாபமாக இறந்தார்.
 
இந்த கொலை சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆரம்பகட்ட விசாரணையில், லெட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்தவருக்கும் இடையே பண விவகாரத்தில் பிரச்சனை இருந்தது தெரியவந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை அறிவிப்பு..!

தாய்லாந்தில் இருந்து ஆன்லைன் மோசடி.. 7000 பேரை நாடு கடத்தும் அரசு..!

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை உணவு கடை.. மத்திய அமைச்சர் திறப்பு..!

6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரியலூர் அரசு பள்ளி ஆசிரியர் கைது..!

கோடிக்கணக்கில் கிரிப்டோ கரன்சியில் மோசடி.. தமன்னா, காஜல் அகர்வாலிடம் விசாரணையா?

அடுத்த கட்டுரையில்
Show comments