Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக முன்னாள் அமைச்சரை அலறவைத்த ஆபாச வீடியோ: நீதிமன்றம் புதிய உத்தரவு

திமுக முன்னாள் அமைச்சரை அலறவைத்த ஆபாச வீடியோ: நீதிமன்றம் புதிய உத்தரவு

திமுக முன்னாள் அமைச்சரை அலறவைத்த ஆபாச வீடியோ: நீதிமன்றம் புதிய உத்தரவு
, வியாழன், 12 மே 2016 (11:51 IST)
திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் குறித்த ஆபாச வீடியோ வெளியிடுவது குறித்து பெரிய கருப்பன் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
 

 
திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் கே.ஆர்.பெரிய கருப்பன். இவர் தற்போது திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
 
இவர், ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,  மனுவில் “நான் திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறேன். நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று பல்வேறு ஊடகங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.
 
இந்த நிலையில், நான் ஒரு பெண்ணுடன் இருப்பதாக ஒரு ஆபாச வீடியோவை, உள்நோக்கத்துடன் தனியார்  தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ, நவீன டிஜிட்டல் முறையில் என் உருவத்தை பொய்யாக சித்தரித்து, தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, தேர்தலில் என் வெற்றி வாய்ப்பை சீர் குலைக்க திட்டமிடுகின்றனர். எனவே அந்த ஆபாச வீடியோவை தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதி மன்றத்தில் தனியார் டிவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் மற்றும் வைரமூர்த்தி, தேர்தல் ஆணையத்தின் உத்தரப்படி,  அந்த வீடியோ காட்சி கடந்த 9 ஆம் தேதி முதலே நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
 
இதனையடுத்து, அந்த சர்ச்சைக்குரிய அந்த வீடியோ காட்சியை நிறுத்தியுள்ளதாக தனியார் டிவி நிர்வாகம் கூறியுள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க தேவையில்லை. மேலும், ஊடகங்கள் ஆரோக்கியமான விமர்ச்சனங்களை முன்வைக்க வேண்டும். தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் விமர்ச்சனம் செய்ய வேண்டும் என கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனிமொழி பிரச்சாரம் செய்ய சுற்றுகிறாளே இவளுக்கு பாதுகாப்பு அளிப்பது யார்?: நாஞ்சில் சம்பத்தின் அநாகரிக பேச்சு