Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றாவது வெளியாகுமா திமுக வேட்பாளர் பட்டியல்?

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (09:42 IST)
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கூட்டணி கட்சிகளையும் அவற்றிற்கான தொகுதிகளை ஒதுக்கும் பணிகளையும் வேக வேகமாக நடத்தி முடித்தது.  
 
அதன்படி, திமுக தனது கூட்டணியில் 12 கட்சிகளை இணைத்துக்கொண்டுள்ளது. திமுக - 174, காங்கிரஸ் - 25, சி.பி.எம் - 6, சிபிஐ - 6, விசிக - 6, மதிமுக - 6, ஐ.யூ.எம்.எல் - 3, கொ.ம.தே.க - 3, மமக - 2, த.வா.க - 1, ஆ.த.பேரவை - 1, ம.வி.க - 1 என தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது.  
 
தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவையான நிலையில் திமுக அதனை விட கூடுதலாக 56 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது திமுகவின் வியூகமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது என தெரிவித்துள்ளது. 
 
நேற்றே இந்த பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments