Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரு தெர்மாக்கோலா?: செல்லூர் ராஜுவை வாரிய துரைமுருகன்!

யாரு தெர்மாக்கோலா?: செல்லூர் ராஜுவை வாரிய துரைமுருகன்!

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (17:42 IST)
அமைச்சர் செல்லூர் ராஜூ வெயில் காரணமாக வைகை அணையின் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல் போட்டு மூடும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த திட்டம் ஆரம்பித்த உடனேயே பல்பு வாங்கி கைவிடப்பட்டது.


 
 
இதனையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூவை தெர்மாக்கோல் ராஜூ என சமூக வலைதளங்களில் கலாய்த்தனர். சீன பத்திரிகைகள் கூட இதனை விமர்சித்து செய்தி வெளியிட்டிருந்தது. செல்லூர் ராஜூவை விமர்சித்து தொடர்ந்து மீம்ஸ்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது.
 
தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூ என்றாலே தெர்மாக்கோல் தான் நினைவுக்கு வரும் அளவுக்கு அவரை கலாய்த்துவிட்டனர் நெட்டிசன்கள். இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் செல்லூர் ராஜூவை தெர்மாக்கோல் என கிண்டலடித்துள்ளார்.
 
மதுரையில் திமுக சார்பில் நடந்த நீட் தேர்வு குறித்தான கருத்தரங்கில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகனிடம் செய்தியாளர்கள் செல்லூர் ராஜூ குறித்து கேள்வி கேட்டனர்.
 
அதற்கு பதில் அளித்த துரைமுருகன் யாரு, தெர்மாக்கோலா, தமிழ்நாட்டின் அவமான சின்னத்தை பற்றி கேட்கறீங்களே என கூறி சிரித்தார். அதன் பின்னர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments