Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக ... திமுக ... கட்சிகள் மாஃஃபியாக்கள்...நித்யானந்தா பேஸ்புக் வீடியோ

Webdunia
சனி, 7 டிசம்பர் 2019 (14:07 IST)
நித்யானந்தா, இமயமலைச் சாரலில்  பதுங்கி இருப்பதை, உளவுத்துறை அமைப்பு கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் அவர் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நித்தியானந்தாவின் முன்னாள் உதவியாளர் ஜனார்தா சர்மா, தனது இரு மகள்களை அடைத்து  வைத்து நித்யானந்தா கொடுமைப்படுத்துவதாக அளித்த புகாரின் பேரில், நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
 
இந்தப் புகாரை அடுத்து  சிறுமிகளை தொந்தரவு செய்தது தொடர்பாக, ,நித்யானந்தா மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர்  தப்பி ஒடியதாக தகவல்கள் வெளியானது.
 
ஆனால், அதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தது. அதனால், போலீஸார் நித்யானந்தாவை வலை வீசி தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில், சர்ச்சைகளில் சிக்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ள நித்யானந்தா, கைலாஷ் என்ற பெயரில் ஒரு தனித் தீவை வாங்கி அதில் தனிநாடு அமைக்கப் போவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
நித்யானந்தா, தென் அமெரிக்கா நாடான ஈகவெடார் அருகில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் விர்டுவல் ஹிந்து என்ற பெயரில் ஒரு நாட்டை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
இந்நிலையில், நித்தியானந்தா, தற்போது, இமயமலைச் சாரலில்  பதுங்கியுள்ளதாக  தகவல் வெளியாகிறது. அதனால், உளவுத்துறை அமைப்பு அவரை ரகசியமாக கண்காணித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிறது.
 
இந்நிலையில், இன்று நித்யானந்தா தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,கர்நாடகத்தில்  பாஜக அரசு ஆதிசைவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
 
அதேபோல் கம்யூனிஸ்டு இயக்கங்களும், பெரியார் திராவிட கழகத்தினரும் எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments