Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு.க.செல்வத்தை இடைநீக்கம் செய்த மு.க.ஸ்டாலின்! – திமுகவில் பரபரப்பு!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (12:50 IST)
நேற்று பாஜக தலைவர்களை சந்திக்க டெல்லி சென்ற ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கும் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் நேற்று டெல்லிக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் திரும்பவந்த கு.க.செல்வம் தான் பாஜகவில் இணையவில்லை என்றும், தொகுதி மேம்பாடு குறித்து பேச சென்றதாகவும் கூறினார்.

ஆனால் கு.க.செல்வம் டெல்லி சென்றது திமுக தலைமைக்கே தெரியாது என கூறப்படுகிறது. திமுக எம்.பிக்கள், தலைமை ஆகியவற்றிடம் இதுகுறித்து விவாதிக்காமல் நேரடியாக டெல்லி சென்றதும் பாஜக தலைவரை சந்தித்ததும் ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கு.க.செல்வத்தை திமுகவின் பொறுப்புகளிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். அதன்படி கு.க.செல்வம் திமுக தலைமை நிலைய செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு திமுக தலைமை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments